தினம் ஒரு திருப்பாவை

  • நீயே என் வாழ்வு என்று கோதை நாச்சியார் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டார்.அவ்வாறு வழிபட்டதன் பலனாக திருமாலையே கரம்பிடித்தார்.
  • மார்கழி மாதத்தில் திருமணம் தள்ளி போகும் அல்லது கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமைய  ஆண்டாள் திருப்பாவையை அருளியிருக்கிறார்.

திருப்பாவை

பாடல் : 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதர்?

நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தேற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்த லுடையதாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

-ஸ்ரீ ஆண்டாள்-

பாடல் விளக்கம்:

விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! வாசற் கதவைத் திறக்கதவராயினும் பதிலுங்கூடவா சொல்ல மாட்டார்கள்? மணக்கின்ற துளசி மாலையை திருமுடியில் அணிந்த நாராயணன், நம்மால் போற்றத்தக்க நம் நோன்புப் பரிசான பேரின்பத்தை நல்குவான்;புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயிலே போய் விழுந்த கும்பகரணன் உறங்கும் போட்டியில் உனக்குத் தோல்வியடைந்து அவனுடைய  பேருக்கத்தை உனக்குத் தந்தானா? ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறற்கரிய ஆபரணம் போன்றவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திற! என்று அருளிகிறார் ஆண்டாள்.