இவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்..! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி..!

நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியின் 99வது நிகழ்ச்சி இதுவாகும். 3 அக்டோபர் 2014 அன்று விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 98 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது.

மனதின் குரல் என்பது அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் ஒரு மாதாந்திர உரையாகும், இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்கிறார். இந்த நிகழ்வில் பேசிய அவர் நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளதாக பெருமிதமாக தெரிவித்தார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர் 2013ல் 5000க்கும் குறைவாக உடல் உறுப்பு தானங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அது 2022ல் 15,000ஆக அதிகரித்துள்ளது. உடல் உறுப்பு தானத்தால் ஒரு நபர் 7 முதல் 8 பேர் வரை காப்பாற்றலாம். இதனால் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என தெரிவித்தார்.

Leave a Comment