தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்ற இளம் வீரர் பிரிதிவி ஷா…!

2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் பிரிதிவி ஷாவிற்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை(அக்டோபர் 13 ஆம் தேதி) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 95 ஒவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் அடித்தது.
அதேபோல் இந்திய பந்துவீச்சில் குல்தீப் ,உமேஷ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சேஸ் 98 *, ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 101.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் அடித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரஸ்டான் சேஸ் 106,ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் 6,குல்தீப் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 81 ஒவர்களில் 4 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் அடித்தது.
இதன் பின்னர் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 106.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக பண்ட் 92,ரகானே 80 ,பிரிதிவி 70 ரன்களும் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக மட்டும் அம்பரீஷ் 38 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் 4,ஜடேஜா 3 ,அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.இதனால் இந்தியாவிற்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 16.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.களத்தில் இந்திய அணி வீரர்கள் பிரிதிவி33, ராகுல் 33 ரன்களுடன் இருந்தனர்.இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதனால் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் பிரிதிவி ஷாவிற்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அதேபோல்  10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

13 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

14 hours ago