டி20 உலகக் கோப்பை அட்டவணை: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது தெரியுமா?

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலககோப்பையின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதில் ஜூன் 1ல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள இந்த தொடரை அமெரிக்காவும் , மேற்கு இந்திய நாடுகளும் இணைந்து நடத்துகிறது.

இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற 20 அணிகள் கலந்து கொள்கின்றது .குழு ஆட்டம் ( Group stage ), சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் சுற்று என மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறும். சென்ற 2010 ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலக கோப்பை மேற்கு இந்தியவில் நடைபெற்றது அதன் பின் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேற்கு இந்தியாவில் நடைபெறுகிறது . ஆனால் இந்த முறை அமெரிக்கா நாடும் கைகோர்த்து உள்ளது .

இந்த முறை பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே குழுவில் தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும் ஆட்டம் வருகிற ஜூன்9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈசென்ஹோவர் பார்க்கில், கிழக்கு மியாடோவில் நடக்கிறது . உலக கோப்பையில் நடக்கவிருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்ட ஆட்டம் என்றால் அது இதுதான். இந்த உலக கோப்பையில் தான் முதல் முறையாக அமெரிக்கா, உகாண்டா மற்றும் கனடா அணிகள் பங்கு பெறுகின்றன.

20 அணிகளும் ஐந்து ஐந்தாக . Group A,Group B,GroupC மற்றும் Group D என நான்கு பிரிவாக ..பிரிக்க பட்டு உள்ளனர்.

ஏ பிரிவு:

  • ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து,  அமெரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி பிரிவு : 

  • பி பிரிவில் இங்கிலாந்து, நமீபியா, ஆஸ்திரேலியா,  ஓமன், ஸ்காட்லாந்து, அணிகள் ஆகிய  இடம்பெற்றுள்ளது.

சி பிரிவு : 

  • சி பிரிவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, கினியா, வெஸ்ட் இண்டீஸ், பப்புவா நியூ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

டி பிரிவு:

  • டி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நேபாளம் நெதர்லாந்து, ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

வழக்கம் போல இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றாமல் 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஏன் என்றால் இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது அதற்கு பின் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை சென்ற முறையும் அறை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து உடன் தோற்று வெளியானது குறிப்பிடதக்கது.

இந்தியா விளையாடும் போட்டிகள் 

  • ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து, இடம் (நியூயார்க்)
  • ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான், இடம் (நியூயார்க்)
  • ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா, இடம் ( நியூயார்க்)
  • ஜூன் 15 – இந்தியா – கனடா, இடம் (புளோரிடா)