சிவசேனா கட்சி சின்னம் குறித்த வழக்கு.! ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.!

சிவசேனா கட்சி சின்னம் குறித்த வழக்குவரும் ஜூலை 31க்கு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து சிவசேனா கட்சி சார்பாக உத்தவ் தாக்கரே முதலைவராக பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு , ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஷிண்டே கடந்த வருடம் ஜூன் மாதம் மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றார்.

இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்தை முறையிட்டார் உத்தவ் தாக்கரே. அப்போது ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்ரே தரப்பும் ஆதாரங்களை சமர்ப்பித்தது. அதில் கட்சி சின்னமும் கட்சியும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு என தேர்தல் ஆணையம் அன்மையில் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றதில் வழக்கு குறித்து வழக்கு தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வரும் ஜூன் 31ஆம் தேதித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.