இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழை முதலமைச்சர்கள்..! வெளியான டாப் 5 லிஸ்ட்.!

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் யார் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளனர். அதே போல , யார் குறைவான சொத்து மதிப்பு வைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதே போல யாரெல்லாம் குறைந்த சொத்து மதிப்பு வைத்து இருந்து கடைசி  இடத்தில் இருக்கிறார்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் ஆந்திரா :

இதில் முதலிடத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 510 கோடி ரூபாய் என வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமு காண்டு ரூ.163 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

4வது இடத்தில் புதுச்சேரி :

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.63.87 கோடி மதிப்புடன் மூன்றாம் இடத்திலும், ரூ.46 கோடி சொத்துக்களுடன் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ 4வது இடத்திலும் , புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

கடைசி இடத்தில் மே.வங்கம் :

அதே போல,, இந்தியாவின் சொத்து மதிப்பு குறைந்த முதல்வர் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 15 லட்ச ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் அசையா சொத்துக்கள் எதுவுமே இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக, இரண்டாவது இடத்தில், 1 கோடி சொத்து மதிப்புகளுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் சொத்துமதிப்பு குறைந்த முதல்வர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டெல்லி – தமிழ்நாடு :

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்கமா ஆகியோர் முறையே ரூ.17 கோடி மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளனர். அதே பல 3 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை சொத்து கொண்ட முதல்வர்கள் பட்டியலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிக கடன்கள் :

அதே போல அதிக கடன் உள்ள முதல்வர்கள் பட்டியலில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், முதலிடத்தில் உள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.23.5 கோடியாகும், அவரது கடன்கள் சுமார் 8.8 கோடி ஆகும். அடுத்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ரூ.8.92 கோடிக்கு சொத்து வைத்துள்ளார் அதே போல, ரூ.4.9 கோடி கடன் வைத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ரூ.11.6 கோடி மதிப்பிலான சொத்துக்களும் , ரூ.3.75 கோடி கடன்களையும் பெற்றுள்ளனர்.

சராசரி ரூ.33 கோடி :

மாநில முதல்வர் பதவி ஏற்கையில் கொடுக்கும் பிராமண பத்திரிகை விவரத்தில் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் இந்த சொத்து விவரங்கள் கணக்கிடப்பட்டுளான. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 29 முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

Leave a Comment