தொடரை கைப்பற்றுமா இந்தியா.? வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்.!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று விளையாட உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி வேஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று 2வது டெஸ்ட் போட்டி  டிரினிடட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியானது இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் 100வது போட்டியாகும். இந்த 100வது பொட்டியில் ஆட உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக ஆர்வமாக உள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா கூறினார்.