உலகம்

அமெரிக்காவை தாக்கிய வெள்ளம்…2 பேர் பலி.. நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்!!

அமெரிக்கா :  வட-மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 2 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோவாவில் ஒருவரும், தெற்கு டகோட்டாவில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய உடல்களை மீட்க முடியவில்லை என மீட்பு துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர்.

கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டாவிலிருந்து அயோவா மற்றும் மினசோட்டா வரையிலான பகுதியில், கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மழையால் கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டா ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, இந்த இடங்களின் சில பகுதிகளில் 46 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதில், வீடுகள் சேதமடைந்தன, சில சாலைகள் மூடப்பட்டன என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வெள்ளம் கரைகளை உடைத்த காரணத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் நுற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.  செவ்வாய்க்கிழமை காலை கடுமையான இடியுடன் கூடிய மழை காரணமாக அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 150,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

வெள்ள அபாய எச்சரிக்கை இந்த வாரத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்களன்று அயோவா மாநிலத்தில் ஒரு பெரிய பேரழிவு இருப்பதாக அறிவித்தார் மற்றும் கடுமையான புயல்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில, பழங்குடி மற்றும் உள்ளூர் மீட்பு முயற்சிககளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

Recent Posts

‘இரவு முழுவதும் அழுதேன்’ ..! இந்தியா தோல்வியை நினைவு கூர்ந்த கவுதம் கம்பீர் !

கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி…

15 hours ago

புனேவில் வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிக்கும் தொற்று பரவல்.! முழு விவரம்..

மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ்…

15 hours ago

மகளிருக்கான TN-RISE.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கம்.!

சென்னை: மகளிருக்கான தமிழக அரசின் புதிய திட்டமான TN-RISE நிறுவனத்தை தொடங்கினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மகளிர் தொழில் முனைவோர் நலன் கருதி அவர்களுக்கு தேவையான தொழில்…

16 hours ago

டி20 உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட புதிய சாதனைகள் …! பட்டியலை வெளியிட்ட ஐசிசி..!

ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை…

16 hours ago

ஜஸ்ட் மிஸ்!! ஸ்கூட்டி மீது வேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.!

வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது.…

16 hours ago

இனி பாஜக ஆட்சி தான்.. கேரளாவிலும் தொடங்கிவிட்டோம்.! லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.!

டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும்…

16 hours ago