தொழில்நுட்பம்

கூகுளை ஃபாலோ செய்யும் வாட்ஸ்அப்.? விரைவில் வரப்போகும் புதிய வசதி.!

வாட்ஸ்அப்: கூகுள் மீட்டிங் போல வாட்ஸ்அப் செயலியிலும் தேதி நேரம் குறிப்பிட்டு குழு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல கூகுள் நிறுவனம் மூலம் குழு அல்லது இரு நபர்கள் தனியே தேதி குறிப்பிட்டு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த கூகுள் மீட்டிங் வசதியில் பயனர்கள் தங்கள் மீட்டிங் நடைபெறும் தேதி நேரம் குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) அனுப்ப முடியும். அதனை ஏற்பதும் ஏற்காததும் மற்ற நபரின் விருப்பம்.

தற்போது அதே போன்ற ஒரு வசதியை பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த வசதி மூலம் ஒரு நிகழ்வை (Event) நீங்கள் சாதாரணமாக ஒரு குரூப் போல நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். பின்னர், அதில் தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) மற்ற பயனர்களுக்கு அனுப்பி விடலாம்.

இந்த வரவேற்ப்பு லிங்கை ஏற்பதும், ஏற்காமல் நிராகரிப்பதும் பயனர்களின் விருப்பம். அந்த வாட்ஸ்அப் நிகழ்வு (WhatsApp Event) மூலம் சாதாரணமாக குரூப் சாட் செய்து கொள்ளலாம், குரல் பதிவு அனுப்பலாம். குறிப்பிட்ட நேரத்தில் வீடியோ கால் செய்து மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

இந்த புதிய வசதியானது முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டும் உள்ள பீட்டா வெர்சன் வாட்ஸ்அப்பிலல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் நிறை குறைகள் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் இந்த Event வசதி மேம்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும்  என கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செய்தி பரிமாற்ற பாதுகாப்பு போல குழுவில் உள்ள நபர்கள் தவிர வேறு யாரும் குழுவில் உள்ள செய்திகள், குரல் பதிவுகளை பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Recent Posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை., குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.! ராகுல் காந்தி இரங்கல்.!

டெல்லி: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். நேற்று, சென்னையை அடுத்த பெரம்பூர்…

15 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…கதறி அழும் பா.ரஞ்சித்!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது…

35 mins ago

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…

35 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.! தவெக தலைவர் விஜய் வேதனை.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில…

1 hour ago

அதுக்காக ‘லிப் லாக்’ பண்ணமாட்டேன்! அது இருந்தால் ஓகே..ரகுல் ப்ரீத் சிங் பேச்சு!

ரகுல் ப்ரீத் சிங் : சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் கதைகளுக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவையோ அந்த காட்சிகளில் தைரியமாக நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. மேலும்,…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி.!

சென்னை : பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை தனது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு…

1 hour ago