கழுகு கழுகா தான் இருக்கு…காக்கா தான் கழுகாக முன்னேறிக்கிட்டு இருக்கு! – கே.ராஜன்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காகம் – கழுகு கதை ஒன்று கூறியது இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணமே நேற்று லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்ன குமார் மற்றும் விஜய் இருவரும் காகம், கழுகு கதையை பற்றி பேசினார்கள். குறிப்பாக ரத்ன குமார்  எவ்வளவு உயர பறந்தாலும் பசி என்றால்  கீழே தான் வரவேண்டும்  என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த பலரும் இவர் ரஜினி பேசியதற்கு தான் இப்படி பேசியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையில், இந்த காக்க -கழுகு பிரச்சனை குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கே.ராஜன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கே.ராஜன் ” இந்த காக்க -கழுகு பிரச்சனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இப்போது காக்க கழுகாகிறதா? அல்லது கழுகு காக்காவாகிறதா? அந்த போட்டி தான் ஓடிகொண்டு இருக்கிறது. இதில் கழுகு கழுக்காகத்தான் இருக்கிறது. காக்கா கழுகாக முன்னேறி கொண்டு இருக்கிறது. அந்த கதை சொன்ன கழுகு பறந்து கொண்டு தான் இருக்கிறது. எதை வைத்து சொல்கிறேன் என்றால் ஜெயிலர் படத்தின் வசூலை வைத்து சொல்கிறேன்.

மனித தோலில் செருப்பு தைச்சா ஒருநாள் கூட உழைக்காது! விஜய்யை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

ஆனால், லியோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை இதை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை எல்லாருக்குமே தெரியும். படத்திற்கு வெற்றிவிழா நடத்தியது எல்லாம் சரி தான். 1000 கோடியை தாண்டும் என பலரும் சொன்னார்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேணுமென்றால் படம் 600 கோடி வரை வசூல் செய்யலாம் அதற்கு மேல் வசூல் செய்வது என்பது சந்தேகம் தான்” என கூறினார்.

அதனை தொடர்ந்து அவரிடம் தொகுப்பாளர் லியோ விழாவில் ரத்ன குமார் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் கே.ராஜன் ” விமானம் என்றால் மேலே பறந்துவிட்டு தான் கீழே இறங்குகிறது. எனவே மேல் ஏறினாலும் கீழே இறங்கி தான் ஆகவேண்டும் இது இயற்கை. கழுகு இறைக்கு கீழே வந்து தான் ஆகவேண்டும். அதைப்போல தான் காக்கவும் இறைக்கு கீழே வந்து தான் ஆகணும்” என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.