Thursday, November 30, 2023
Homeசினிமாமனித தோலில் செருப்பு தைச்சா ஒருநாள் கூட உழைக்காது! விஜய்யை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

மனித தோலில் செருப்பு தைச்சா ஒருநாள் கூட உழைக்காது! விஜய்யை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பல விஷயங்களை ரசிகர்களுக்காக பேசி இருந்தார். குறிப்பாக ரசிகர்களை நெகிழ வைத்த ஒரு தருணம் என்றால் விஜய் “உங்களுடைய கால்களுக்கு என்னுடைய தோலை செருப்பாக தைத்துப்போட்டால் கூட ஈடாகாது. சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பேன்” என பேசி இருந்தார். இதனை கேட்ட விஜய் ரசிகர்களும் ரசிகர்கள் மீது தளபதி எவ்வளவு அன்பு என எமோஷனலானார்கள்.

ஆனால், விஜய் இப்படி பேசியதை பார்த்த சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டைமாறன் பங்கமாக கலாய்த்து தனது எக்ஸ் வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். விஜய் பேசியது குறித்து பதிவிட்டு இருக்கும் அவர் ” மனித தோலில் செருப்பு தைத்தால் அந்த செருப்பு ஒருநாள் கூட உழைக்காது. அதனால.. ஓவரா புல்லரிக்காம பேசுறது நல்லது. எனவும் இந்த மாதிரி க்ரிஞ் தனமா பேசாதீங்க” எனவும் பதிவிட்டு இருக்கிறார்.

விஜய்க்காக அதை கூட பண்ணுவேன்! அரங்கத்தை அதிர வைத்த மிஷ்கின்!

அது மட்டுமில்லாமல் வெற்றி விழாவில் விஜய் பேசியது மற்ற பிரபலங்கள் பேசியது என அனைத்தையுமே விமர்சனம் செய்து பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக லோகேஷ் தன்னுடைய கட்சியில் சேர்ந்தால் அவருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு மந்திரி பதவி கொடுப்பேன் என விஜய் கூறியிருந்தார். அதற்கு ப்ளூசட்டை மாறன் ” கட்சில சேந்தா மந்திரி பதவி தர முடியாது. அதுக்கு.. தேர்தல்ல ஜெயிக்கனும். நீங்க முதல்வர் ஆகனும். இதெல்லாம் சத்தியமா நடக்கப்போறது இல்ல. அவர் வழக்கம்போல போதை மருந்து கடத்தல் படங்களை எடுத்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான்” என கூறிஉள்ளார்.

அதைப்போல 2026 அரசியல் வருகை குறித்து சூசகமாக விஜய் கப்பு முக்கியம் பிகிலு என கூறியிருந்தார். அதற்க்கும் விமர்சித்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் ” அதுக்கு மொதல்ல கட்சி ஆரம்பிக்கனும் பிகிலு. அப்பறம் தேர்தல்ல ஜெயிக்கனும் பிகிலு. இதெல்லாம் ரெண்டு வருசத்துல நடக்கவே நடக்காது பிகிலு” என கூறியுள்ளார்.

வருகிறது ‘லியோ 2’ ! ஹெலிகாப்டரில் வந்து அப்டேட் கொடுக்க காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்!

மற்றோரு பதிவில் ப்ளூ சட்டை  நா ரெடிதான் பாடலில் வரிகள் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை பற்றி விஜய் பேசியது குறித்தும் விமர்சித்து இருக்கிறார். விஜய் பேசியது என்னவென்றால் ” பொதுவாகவே சினிமாவில் நல்லதையும், கெட்டதையும் பிரித்துக்காட்ட காட்சிகள் வைப்பது இயல்புதான். இது நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை அது உங்களுக்கு நன்றாக தெரியும். பள்ளி, கல்லூரி செல்லும் வழியில் ஒயின்ஷாப் உள்ளது. எல்லோரும் ஒரு ரவுண்டு போட்டுட்டா ஸ்கூலுக்கும், காலேஜுக்கும் போறாங்க?” என கூறியிருந்தார்.

அதனை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ” பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. மாணவிகள் கூட சாராயம் குடிக்கும் செய்தி மற்றும் வீடியோ வந்துள்ளது. பள்ளி, கல்லூரி அருகேயுள்ள பெட்டிக்கடைகளில் மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கும் செய்திகளும் வந்துள்ளது‌. இதுபற்றி எதுவுமே தெரியாமல் பேச வேண்டியது. எடுக்கறது போதைக்கடத்தல் படம். அதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பு வேற” என பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக விஜய் பேசியதை வைத்து இவர் விமர்சித்து பதிவிட்டு வருவது ரசிகர்களுக்கு கடுப்பேற்றியுள்ளது.