தமிழ்நாட்டு மக்கள் மின் சாதனங்களை உபயோகிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு தள்ளியுள்ளது – ஜெயக்குமார்

தமிழ்நாட்டு மக்கள் மின் சாதனங்களை உபயோகிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என ஜெயக்குமார் பேட்டி. 

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும்,  கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதற்க்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட் செய்திருந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினோம், கட்டணத்தை உயர்த்தவில்லை மாறாக சலுகைகள் வழங்கினோம்; நல்ல நிர்வாகத்தால் அதிமுகவில் சாத்தியமாயிற்று, திமுக அரசு மத்திய அரசு மீது பழியை போடுகிறது.

அதிமுக ஆட்சியிலிருந்த போதும் மத்திய அரசு கடிதம் எழுதியது. ஆனால் மக்களை பாதிக்கும் என்பதால் கட்டணத்தை உயர்த்தவில்லை; தமிழ்நாட்டு மக்கள் மின் சாதனங்களை உபயோகிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Comment