பரபரப்பான எதிர்க்கட்சிகள் கூட்டம்… வருகை தந்துள்ள தலைவர்களின் லிஸ்ட் இதோ…

இன்று எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரதான கட்சி தலைவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. 

இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் தேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி , சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மற்றபடி 15க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. தற்போது 12 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமான தலைவர்கள் விவரங்களை இங்கே காணலாம்.

  • ராகுல் காந்தி – காங்கிரஸ்.
  • மல்லிகார்ஜுன கார்கே – காங்கிரஸ்.
  • நிதிஷ்குமார் – ஐக்கிய ஜனதா தளம்
  • மு.க.ஸ்டாலின் – திமுக.
  • மம்தா பானர்ஜி – திரிணாமுல் காங்கிரஸ்.
  • சரத் பவார் – தேசியவாத காங்கிரஸ்.
  • ஹேமந்த் சோரன் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
  • மெகபூபா முப்தி – மக்கள் ஜனநாயக கட்சி
  • பரூக் அப்துல்லா – தேசிய மாநாடு கட்சி.
  • அகிலேஷ் யாதவ் – சமாஜ்வாடி
  • உத்தவ் தாக்கரே – சிவசேனா (ஒரு பிரிவு)
  • திபங்கர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
  • டி.ராஜா – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
  • தேஜஸ்வி யாதவ் – ராஷ்டிரிய ஜனதா தளம்.
  • அரவிந்த் கெஜ்ரிவால் – ஆம் ஆத்மி கட்சி.