#BigBreaking:சட்டசபைக்கு வராத பிரதமர் இம்ரான்;நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு!

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான் கான் அரசே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, இம்ரானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை:

இதனைத் தொடர்ந்து,பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த,பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடந்து வருகின்றன. ஆனால், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இன்று நடைபெறாது:

இதனால்,பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் சற்று முன்னர் அறிவித்திருந்தார்.

தீர்மானம் நிராகரிப்பு:

இந்நிலையில்,பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்துள்ளார்.குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதனை துணை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

மேலும்,ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தையும் துணை சபாநாயகர் காசிம்கான் ஒத்தி வைத்துள்ளார்.