ஓபிஎஸ்க்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

OPS : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். அதன்படி, இருவரும் ஒன்றாக இணைந்து இந்த மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளனர்.

Read More – பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இதனிடையே, பாஜக கூட்டணியில் தொடர்வதாக ஓ.பி.எஸ். அணி அறிவித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

Read More – திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு!

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தங்களது அணியின் செயல்பாடு, தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடலாம், யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ்க்கு அதிகாரம் வழங்கி அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read More – உதய சூரியனுக்கு “நோ”.! பம்பரம் சின்னத்தில் தான் போட்டி.! மதிமுக திட்டவட்டம்.!

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கூறியதாவது, கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் குறித்து ஆலோசித்து எதிர்காலத்தை நினைவில் வைத்து ஒரு நல்ல முடிவை நாங்கள் எல்லாம் சேர்ந்து எடுப்போம் என அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு உறுதி அளித்தார். மேலும், பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம் என்றும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment