கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார் – வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார்  என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று  வெளியானது.

அதில், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.  அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும்  விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இதற்கிடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக  செய்திகள் பரவியது.

இந்நிலையில்,  பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், ” கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

3 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

18 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

29 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

32 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago