விரக்தியில் இந்திய கேப்டன் செய்த செயல்… கோபத்தில் போட்டோ எடுக்காமல் சென்ற வங்கதேச அணி.!

இந்திய அணியுடன் போட்டோ எடுக்காமல் பங்களாதேஷ் அணி கேப்டன் சென்றது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற 3-வது மற்றும் தொடரை நிர்ணயிக்கும் போட்டி மிர்பூரில் வெற்றி/தோல்வியின்றி சமனில் முடிந்தது. இந்த போட்டியில் சுவாரசியமான பல விஷயங்கள் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் மூன்றாவது போட்டியும் சமனில் முடிவுற்றது.

இந்த போட்டியில் இந்திய கேப்டனுக்கு நடுவர் வழங்கிய அவுட் முடிவால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டால் ஸ்டம்ப்பை அடித்துவிடுவார், இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது முடிவதற்குள் போட்டி முடிந்து கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், வங்கதேச அணி கேப்டனிடம் ஹர்மன்ப்ரீத் நடுவரையும் வரும்படி கூறியுள்ளார்.

மீண்டும் இரு அணிகளும் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போதும், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத், வங்கதேச அணி கேப்டனிடம் நீங்கள் மட்டும் ஏன் இருக்கிறீர்கள் நடுவரையும் கூப்பிடுங்கள் என விடாமல் கேட்டுக்கொண்டிருக்க வங்கதேச அணி கேப்டன் தனது அணியுடன் கிளம்பிவிடுவார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ம்ரிதி மந்தனா, நடுவர்கள் அனைவரும் வங்கதேச அணியைச் சேர்ந்தவர்கள் மேலும் டி.ஆர்.எஸ் முறையும் கிடையாது என்பதால், இது போன்ற குழப்பங்கள் நடந்துள்ளது. அடுத்தமுறை நடுவர்கள் இரு அணிகளுக்கும் பொதுவான ஒருவர் இடம்பெறவேண்டும் என பிசிசிஐ, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி யிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.