,
AfghanistanFloods

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 26 பேர் உயிரிழப்பு..! 40 பேரைக் காணவில்லை..!

By

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

   
   

மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாவும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி கூறுகையில், வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் வெள்ளத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டதோடு, 604 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதற்கிடையில் நாடு முழுவதும், “கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ரஹிமி கூறினார்.

Dinasuvadu Media @2023