அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்து மொழிகளில் பாடப்புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் இருக்க வேண்டும் – மத்திய அரசு..!

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்திய மொழிகளில் ஒவ்வொரு பாடத்தையும் (Study Material ) டிஜிட்டல் முறையில் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளில் பள்ளி மற்றும் உயர்கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கான (Study Material )பாடத்தையும் டிஜிட்டல் முறை கிடைக்கச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி அமைச்சகம் இன்று  வெளியிட்ட அறிக்கையில், “UGC, AICTE, NCERT, NIOS, IGNOU மற்றும் IITகள், CUகள் மற்றும் NITகள் போன்ற INI தலைவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்துப் படிப்புகளுக்கும் இந்திய மொழிகளில் (Study Material ) கிடைக்கச் செய்ய வேண்டும். யுஜிசி (UGC),  ஏஐசிடிஇ (AICTE) மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவை மாநிலப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினையை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020, பாரதத்தின் பன்மொழித் தன்மையே அதன் மிகப்பெரிய சொத்து மற்றும் பலம் என்ற கருத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது. அதன் சமூக-கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு திறமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். “உள்ளூர் மொழிகளில் பாடப்புத்தகத்தை  உருவாக்குவது, இந்த பன்மொழிச் சொத்தை உயர்த்தி, 2047-க்குள் நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற ‘விக்சித் பாரத்’ க்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இந்த திசையில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது என்றும் , பொறியியல், மருத்துவம், சட்டம், யுஜி, பிஜி  புத்தகங்களின் மொழிபெயர்ப்பு அனுவாதினி AI அடிப்படையிலான செயலி மூலம் செய்யப்படுகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்தப் புத்தகங்கள் ekumbh இணையதளத்தில்  கிடைக்கின்றன. பள்ளிக் கல்விச் சூழல்களுக்கு ஏற்றவாறான குறிப்பேடுகள் DIKSHA செயலியில்  பல இந்திய மொழிகளில் உட்பட 30 க்கு மேற்பட்ட  மொழிகள் கிடைக்கும் . JEE, NEET, CUET போன்ற போட்டித் தேர்வுகள் 13 இந்திய மொழிகளில் நடைபெற்று வருகின்றன”  என கூறியுள்ளது.