தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மேலும், அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° -3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° – 4° செல்சியஸ் குறைவாக இருந்தது. இதர தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2″ -4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.

சென்னை நிலவரம்:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.