மூர்க்க குணமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2-ஆம் தாயாக இருந்து திருத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து  திருத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சஞ்சய் என்பவர் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதே பள்ளியை சேர்ந்த மாறி என்ற மாணவனிடம் செய்முறை வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார்.

இந்த நிலையில், அந்த மாணவன் ஆசிரியை முன்பதாக  தரையில் பாய் போட்டு படுத்துளார். இதனை தட்டி கேட்டபோது அவரை தாக்க முயன்றுள்ளார். இந்த செயலை சக மாணவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதனையடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி பள்ளி தலைமையாசிரியர் முன்பு மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  விசாரணைக்கு பின், மாணவன் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், ‘மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து  திருத்த வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.