இறுதிபோட்டிக்கு முன்னேறிய தமிழக மகளிர் கபடி அணி..!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், 3-வது நாளான நேற்று மகளிருக்கான  யோகா போட்டியில் தமிழக வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். இதைத்தொடர்ந்து,  நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணியும், இமாச்சல பிரதேச அணியும் மோதியது. இதில் தமிழக அணி 37-31 என்ற கணக்கில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்… தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அறிவிப்பு..!

பதக்கப் பட்டியலில் தமிழகம் தற்போது முதலிடத்தில் உள்ளது. தமிழக அணி இதுவரை 4 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது. டெல்லி அணி 2  தங்க பதக்கத்தையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும்,  ஒரு வெண்கலம் பதக்கம்  என மொத்தம் 6 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேற்கு வங்க அணி  அணி ஒரு தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 4 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.