ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

Sterlite: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு விவாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மேல் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி  தீர்ப்பளித்தது.

READ MORE- அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறுகையில்” மீண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விதி மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. தொடர் விதிமீறல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே, நாட்டின் வளர்ச்சிக்கு  ஸ்டெர்லைட் பங்களிப்பு செய்தாலும், மக்களின் நல்வாழ்வு அதிக முக்கியத்துவம் வேண்டும். உள்ளூர் மக்கள் நலனை பாதுகாப்பதில் மாநில அரசுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. உயர்நீதிமன்ற முடிவில் தலையிட விரும்பவில்லை. ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது” என தெரிவித்தது.

READ MORE- பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.  கடந்த முறை ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையின் போது நிபுணர் குழு அமைத்து ஆலையை திறப்பது பற்றி ஆய்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் யோசனை வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment