ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு ! இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.பின்னர் ஆலையை திறக்க  பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.அந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று  (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலை வழக்கில்  தமிழக அரசு ,வைகோ உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

7 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

41 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

50 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

58 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago