மாநில கல்வி கொள்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

மாநில கல்வி கொள்கை குழு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தனது அறிக்கையை அளிக்கும் என்று என அமைச்சர் அறிக்கை வெளியீடு.

தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக  உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், எதிர்கால தேவைகள், கனவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுக்க அரசு உறுதியா உள்ளது. மாநில கல்வி கொள்கை வகுக்க ஜூன் 2022-ல் நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மாநில கல்வி கொள்கை குழுவில் மேலும் 2 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் டி.ஃப்ரீடா ஞானராணி உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய துறையின் தலைவர் டாக்டர் ஜி.பழனியும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மாநில கல்வி கொள்கைக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்க மேலும் 4 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநில கல்வி கொள்கை குழு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தனது அறிக்கையை அளிக்கும் என்றும் அறிக்கை கிடைத்ததும் அதன் பரிந்துரைகளை ராசு பரிசீலித்து தமிழ்நாட்டுக்கென கல்வி கொள்கையை வகுக்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். அனைவருக்கும் தரமான கல்வி என்ற உன்னத நோக்கத்தோடு சமச்சீர் கல்வி உட்பட பல திட்டங்கள் தொடர்ந்து செய்லபடுத்தப்படும் எனவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.