உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் பிரதமர் மோடி..!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹிரோஷிமா சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.

இதனையடுத்து, ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, வியட்நாம் பிரதமர் பாம் மின் சென் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், இன்று ஹிரோஷிமா சென்றடைந்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, உக்ரைன் போரை பொருளாதாரம், அரசியல் பிரச்சினை என்று நான் கருதவில்லை, என்னைப் பொறுத்தவரை இது மனிதநேயப் பிரச்சினை. போரைத் தீர்க்க இந்தியாவும் நானும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று கூறினார். மேலும், கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு இரு நாட்டு பிரதமர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.