தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2023… இந்தியா, பாக். அணிகள் ஒரே பிரிவில்.!

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் சாம்பியன்ஷிப் 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

தெற்காசிய கால்பந்து சம்மேளனம்(SAFF) சாம்பியன்ஷிப் 2023, தொடரில் அங்கத்தின் அனைத்து உறுப்பு நாடுகளான வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், லெபனான் மற்றும் குவைத் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. எட்டு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியா இந்த தொடரை நடத்துகிறது.

SAFF சாம்பியன்ஷிப்பிற்காக, அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ரவுண்ட்-ராபின் போட்டிகளில் போட்டியிடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மே 17 ஆம் தேதி இன்று தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடமாக பெங்களூருவை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு(AIFF) அறிவித்துள்ளது.

பிரிவு-A: இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான்

பிரிவு-B: லெபனான், மாலத்தீவுகள், வங்கதேசம், பூடான்

நடப்பு சாம்பியனான இந்தியா தனது வரலாற்றில் நான்காவது முறையாக SAFF சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக மாலத்தீவுகள் இரண்டு முறை இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.