இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்திவிட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது, ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதாவது, ரஜினி கடிசியாக நடித்த அண்ணாத்த படத்திற்கு ஆடியோ வெளியிட்டு விழா வைக்காத நிலையில், இதை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி, ஜூலை மாதம் சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில், முக்கிய பான் இந்தியா நடிகை, நடிகர்களை பலரை அழைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் முதல் சிங்கிள், ஜூன் 2வது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.