ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்த சிராஜ்..! சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி கண்டனம்..!

ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்த முகமது சிராஜ்க்கு முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அணி சில விக்கெட்களை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அணியில் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த போட்டியின் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சிராஜ் பவுலிங் செய்தார். அப்பொழுது, மைதானத்தின் ஸ்பைடர் கேமராவால் கவனம் சிதறிய ஸ்மித் பேட்டிங்கில் இருந்து விலகினார். இதையடுத்து கோபத்தில் சிராஜ் பந்தை ஸ்மித்தை நோக்கி வீசினார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

இது குறித்து பதில் அளித்த சிராஜ், ஆட்டத்தில் இது போன்று நடைபெறுவது இயல்பு, ஆட்டத்தில் நம்மை அவ்வப்போது புத்துணர்வாக வைப்பதற்கு இவ்வாறு நடந்து கொண்டால் மனம் கொஞ்சம் நிம்மதியாகும். நாங்கள் களத்தில் நீண்ட நேரம் விளையாடினோம், அதேநேரம் நான் விக்கெட் விழாத விரக்தியில் இருந்ததாகவும் ஒத்துக்கொண்டார்.

இந்த விவகாரத்தில், முகமது சிராஜிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுனில் கவாஸ்கர், இரண்டாவது நாளே சிராஜ் தனது அமைதியை இழக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், ரவி சாஸ்திரி ஸ்மித்துக்கு ஆதரவாக நின்று, சிராஜ் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய விதம் தவறு என்று கூறியுள்ளார்.