சினிமா

அப்படி கூப்பிட்டா சும்மா போக முடியாது! கடுப்பான நடிகை ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் : தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன் . தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அடிக்கடி இவர் சமூக வலைத்தளங்களிலும், புகைப்படங்களை வெளியீட்டு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவது வழக்கமானது. அந்த வகையில், தற்போது ரசிகர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு கோபத்துடன் ஸ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார். ரசிகர் ஒருவர் தென்னிந்திய மொழிகளில் எதாவது சொல்லுங்கள் என்பது போல கேட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ருதிஹாசன் ” இட்லி, சாம்பார், தோசை என்று கூறுவது சரியில்லை. அப்படி அழைப்பது அழகாக இல்லை. அப்படி அழைப்பதை என்னால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது.  அப்படி கூப்பிட்டா சும்மா போக முடியாது. எனவே, வேடிக்கை கட்டுவது போல நடந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். ‘மூடிக்கொண்டு போங்க ‘ ” என கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஸ்ருதிஹாசனை பாராட்டி வருகிறார்கள். மேலும், நடிகை ஸ்ருதிஹாசன் ‘Dacoit: A Love Story’ என்ற தெலுங்கு – தமிழ் படத்திலும், சென்னை ஸ்டோரி என்கிற தமிழ் -ஆங்கிலம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…

12 hours ago

மக்களே ..! நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ..!

மின்தடை  : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…

18 hours ago

உங்க குழந்தைங்க கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ இது மாதிரி செஞ்சு கொடுங்க.!

மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…

23 hours ago

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

2 days ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

2 days ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

2 days ago