கொரோனா அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை .!

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4:30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் , ஊரடங்கு தளர்வுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற சில மாவட்டங்களில் அதிகமாக  பரவி வருகிறது.

இதற்காக காரணமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் என கூறப்படுகிறது. இதனால், சில மாவட்டங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4:30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,56,369 ஆக உயர்நதுள்ளது. சமீபத்தில், சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.