அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

Ritu Varma தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள், மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு மார்க்கெட் இருக்கிறது.

READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது வழக்கமான ஒன்று தான். அப்படி தான் ரிது வர்மா பற்றியும் வதந்தியாக ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், கடந்த ஆண்டு ரிது வர்மா பிரபல நடிகரான வைஷ்ணவ் தேஜ்ஜை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அப்படியான தகவல் வெளியாவதற்கு முக்கிய காரணமே கடந்த ஆண்டு வருண் தேஜ் மற்றும் லாவண்யா ஜோடியின் திருமணத்திற்கு பிறகு அந்த ஜோடிக்கு நாகார்ஜுனா விருந்து வைத்தார். அப்போது அதில் ரிது வர்மா  மற்றும் வைஷ்ணவ் தேஜ் கலந்து கொண்டார்கள். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது.

Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…

இந்த நிலையில், சமீபத்தில் இது பற்றி பேசி வைஷ்ணவ் தேஜ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய வைஷ்ணவ் தேஜ்”  என்னையும் ரிது வர்மா பற்றியும் பரவுவது வதந்தி தான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் லாவண்யாவின் தோழியாக தான் ரிது வர்மா  கலந்து கொண்டார். மற்றபடி காதலிப்பதாக பரவும் தகவல் உண்மை இல்லை” எனவும் ஹிந்தி நடிகர் வைஷ்ணவ் தேஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நடிகை ரிது வர்மா பட வாய்ப்புகள் இல்லாதா காரணத்தால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment