அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் நீக்கம் தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம்..!

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்.

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் நீக்கம் செய்யாத நிலையில்,  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமனம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் மனோஜ் பாண்டியன் நியமனம் குறித்தும் தேர்தல் அனைத்தும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment