தோனி கூட விளையாடியது அதிர்ஷ்டம்! ஆதரவை பார்த்து வியந்த ரஷீத் கான்!

MS Dhoni : தோனி மைதானத்திற்குள் நுழையும் போது அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய நுழைந்தாலே சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் மைதானத்திலும் அவருக்கான ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும்.

அவர் பேட்டிங் செய்ய கடைசி சில ஓவர்களில் வந்தால் கூட தோனி…தோனி என ரசிகர்கள் கரகோஷம் மீட தொடங்கிவிடுவார்கள். அவருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மற்ற கிரிக்கெட் வீரர்கள் கூட ஆச்சரியம் படுவது உண்டு. அப்படி தான் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை வீரர் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த ஆதரவை பார்த்து குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஆச்சரியம் அடைந்து போட்டி முடிந்த பிறகு அது பற்றி பேசியுள்ளார்.

போட்டி முடிந்த பின் ரஷீத் கான் பேசியதாவது ” நான் தோனிக்கு எதிராக பந்துவீசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை போல ஒரு ஜாம்பவான் உடன் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை அவருடன் விளையாடியதை நான் அதிர்ஷ்டமாக தான் நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள்  நுழையும் போதே அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது.

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமில்லாமல் அவர் உலகின் எந்த இடத்தில் ஆடினாலும் அவருக்கு இதே அன்பு கிடைப்பதுதான் சிறப்பான விஷயம்” என ரஷீத் கான்  தெரிவித்துள்ளார். மேலும், சென்னை குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்ததாக 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20  ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196  ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக குஜராத் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

31 mins ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

5 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

5 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

5 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

6 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

6 hours ago