ராமேஸ்வரம் – 22 புனித தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி!

இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் இறங்கு தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ராமேஸ்வரம் சென்றார். பிரதமர் மோடிக்கு வழிநெடுங்கிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சற்று நேரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார் பிரதமர். தற்போது, ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடுகிறார்.

மௌத் ஆர்கன் வாசித்த ஆண்டாள் யானை.! மனம் உருகி கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி.!

முதலில் அக்னீ தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி, கோயிலுக்குள் சென்று 22 புனித தீர்த்த கிணறுகளில் நீராடி வருகிறார். கடலில் நீராடிய பிறகு பேட்டரி கார் மூலம் கிழக்கு வாசல் வழியாக ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர், புனித நீராடி வருகிறார். நீராடிய பிறகு ராமநாதசுவாமியை தரிசனம் செய்யவுள்ளார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு சிறிதுநேரம் தியானமும் செய்யவுள்ளார் பிரதமர் மோடி.