தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் : ரஜினியின் அனல் பறந்த அரசியல் அதிரடி கருத்து!

கமல்ஹாசன் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகாலம் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என திரை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்து தனது பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்தார். அதில், ‘ கமல்ஹாசன் எனது கலையுலக அண்ணா. நான் நடத்துனராக இருந்து நடிகனாக கஷ்டத்தை விட கமல் அதிகம் கஷ்டப்பட்டார். திரையுலகில், உதவி இயக்குனர், நடன இயக்குனர் என பல்வேறு கஷ்டங்களை தண்டி கதாநாயகனானார். திரை உலகில், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, நடனம், தயாரிப்பு இயக்கம், நடிப்பு என அனைத்தையும் செய்து  60 ஆண்டுகாலம் நிலைத்து நின்றவர் கமல்ஹாசன் மட்டுமே.’ என தெரிவித்து,
பின்னர் அரசியல், கருத்துக்களை பதிவிட்டார். அப்போது, ‘ 2 வருடத்திற்கு முன்னர், தான் முதல்வராக இருப்போம் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது. தமிழ்க அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்று நடக்கிறது. அது போல நாளையும் அதிசயம் நடக்கும். ‘ என அதிரடியாக கருத்துக்களை தெரிவித்தார்.
இவரது அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

Recent Posts

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

5 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

25 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

34 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

42 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago

மதுரையில் பெய்த கனமழை…வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி!

சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…

1 hour ago