#Breaking : ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.! 2 ஆண்டுகள் சிறை உறுதி.?

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும். வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல்காந்தி தரப்பில் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையியிட்டு வழக்கை தொடர்ந்தார் ராகுல்காந்தி. இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று, சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உறுதியாகியுள்ளது. அடுத்ததாக, ராகுல்காந்தி, இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். அங்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்திவைக்க மனுவும் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Leave a Comment