பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் நுழைந்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.!

அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது . இதனை தொடர்ந்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனையால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் எம்பி பதவி திரும்பவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு கேரள மாநிலம் வயநாடு எம்பி பதவி திரும்பவும் வழங்கப்பட்டதால், அவர் இன்று நாடாளுமன்றம் வந்தடைந்தார். தற்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டதொடர் நடைபெற்று வருகிறது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் , நாளை (ஆகஸ்ட் 8) முதல் 3 நாட்களுக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் என பரபரப்பாக இயங்கி வரும் மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேச உள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகவும் கவனிக்கதக்க நிகழ்வாக மாறியுள்ள்ளது.