பொதுமக்களே உஷார்..உச்சத்தில் கொரோனா..! மீண்டும் “Work from home”?

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,676 பதிவான நிலையில், இன்று 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர்.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40,215 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,31,016 ஆக உள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,04,771 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 220,66,24,326 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 441 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டினால் “Work from home”, கொரோனா பகுதிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசு இருக்கிறது.

Leave a Comment