சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் கோரியநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.  அதிமுக கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று பல இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் கோரியநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்பதால், மக்கள் துணை நிற்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி மாற்றப்பட்டுள்ளது.

புதியபிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை என்றும், சொத்துவரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.