#BREAKING: பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பட்டு திட்டம்..!

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதில்,  அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. ஐந்து ஆண்டுகளில் ரூ.7,000 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு. சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு. 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.