பெண்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.. இலவச மின்சாரம்.. ம.பியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பிரியங்கா காந்தி.!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளதால் தற்போதே தேர்தல் பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சி ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறுகையில், பாஜக ஆட்சியில் மாதந்தோறும் ஒரு ஊழல் பட்டியல் வெளியாகி வருகிறது. 220 மாதங்களில் 225 ஊழல்கள் வெளிப்பட்டு உள்ளன. நிலக்கரி சுரங்கம், கொரோனா காலகட்டத்தில் மருத்துவ ஊழல் என கூறி,  அடுத்ததாக தேர்தல் வாக்குறுதிகளை கூறினார்.

மத்திய பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், வீட்டு பயன்பாட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.