எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் – சு.வெங்கடேசன், எம்.பி

உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் என சு.வெங்கடேசன் ட்வீட்.

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% நிறைவடைத்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் நாட்டுக்கு அர்பணிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது. இன்னும் பணி தொடங்காத நிலையில், 95% நிறைவடைத்துவிட்டது கூறியுள்ளது அப்பட்டமான பொய் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.
அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜேபி நட்டா சொன்ன 95 சதவிகிதப் பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை டேக் செய்துள்ளார்.

Leave a Comment