மீண்டும் உயர்கல்வித்துறை.. அவசர அவசரமாக அமைச்சராகும் பொன்முடி.?

Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி.

Read More – கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் எம்எல்ஏவானார் பொன்முடி. அதனை தொடர்ந்து மீண்டும் பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநரை கோரியிருந்தார். .

Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் இதோ…

ஆனால், ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டதன் பெயரில் மீண்டும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுனர் ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இந்த முறையும் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை பொறுப்பு வழங்கப்படும்என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது உயர்கல்வித்துறை பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனித்து வருகிறார்.

Read More – பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!

இன்று மாலை திருச்சியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால், பதவிஏற்பு விழாவை எளிமையாக விரைவாக நடத்த வேண்டும் என ஆளுநர் மாளிகையில் எளிதாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.