கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி.! வெளியான கருத்துக்கணிப்புகள்.!

கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்று என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அங்குள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் மே மாதம் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது எனவும், மே 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

கருத்துக்கணிப்புகள் :

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, காங்கிரஸ் , பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் என பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்னனர், தேர்தல் முடியும் வரையில் கருத்துக்கணிப்பு வெளியிட கூடாது என்பதால்,நேற்றே முக்கிய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியாகின.

பாஜகவுக்கு எதிர்ப்பு :

அதில், சி வோட்டர் எனும் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் 57 சதவீதம் பேர் ஆட்சி மற்றம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 39சதவீதம் பேர் காங்கிரஸ் ஆட்சி வரும் என்றும், 34 சதவீதம் பேர் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் எனவும் மற்றவர்கள் வெவ்வேறான கருத்துக்களையும் தெரிவித்தனர்.

காங்கிரஸ் ஆட்சி :

சி-வோட்டர்ஸ் மற்றும் ஏபிபி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி 115 முதல் 120 தொகுதிகளையும், பாஜக கட்சி 68 முதல் 80 இடங்களிலும், குமாரசாமியின் ஜனதா தளம் 23 முதல் 35 இடங்களையும் கைப்பற்றும் என வாக்குபதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

Leave a Comment