டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய அரசின் முதல் அங்கீகாரம்.! விருதுகளை வழங்கினார் பிரதமர் மோடி.!

National Creative Awards – நாட்டில் முதன்முறையாக மத்திய அரசால் டிஜிட்டல் தளம் மூலம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் நபர்களை MYGov.in எனும் தளத்தின் மூலம் பொதுமக்கள் பரிந்துரையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களுக்கு இன்று டெல்லி பாரத் மண்டபத்தில் விருது வழங்கப்பட்டது.

Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!

இந்த விருதானது, சிறந்த கதைசொல்லி, சிறந்த பொது படைப்பாளி, பசுமை சாம்பியன்,  சிறந்த சமூக மாற்ற படைப்பாளி, விவசாய படைப்பாளி, காலாச்சார படைப்பாளி, சர்வதேச படைப்பாளி, பயண படைப்பாளி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கபட்டு வருகிறது.

ReadMore – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!

பாரத் மண்டபத்தில் நடைபெற்று வந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதன் விவரம் பின்வருமாறு…

  • சிறந்த தனிநபர் படைப்பாளர் விருது – பியூஷ் புரோஹித்.
  • கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி விருது – நிஷ்சய்.
  • சிறந்த உடல்நலம் மற்றும் உடற்தகுதி படைப்பாளர் விருது – அங்கித் பையன்பூரியா.
  • கல்வி பிரிவில் சிறந்த படைப்பாளி விருது – நமன் தேஷ்முக்.
  • உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளி விருது – கபிதா சிங் (கபிதாஸ் கிச்சன்).
  • ஆக்கப்பூர்வமான படைப்பாளி-ஆண் விருது – ஆர்ஜே ரவுனக்.
  • ஆக்கப்பூர்வமான படைப்பாளி (பெண்) விருது – ஷ்ரத்தா.
  • ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது – ஜான்வி சிங்.
  • தூய்மை தூதர் விருது – மல்ஹர் கலம்பே.
  • தொழில்நுட்ப பிரிவில் சிறந்த படைப்பாளர் விருது – கௌரவ் சவுத்ரி.
  • விருப்ப பட்டியல் டிராவல் கிரியேட்டர் விருது – காமியா ஜானி.
  • சிறந்த சர்வதேச படைப்பாளர் விருது – ட்ரூ ஹிக்ஸுக்.
  • சிறந்த கலாச்சார தூதர் விருது – மைதிலி தாக்கூர்.
  • சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருது – ஜெய கிஷோர்.
  • பசுமை சாம்பியன் விருது (விருப்ப பட்டியல்) – பங்க்டி பாண்டே.
  • விவாத அமைப்பாளர் விருது -ரன்வீர் அலபாடியா.
  • சிறந்த கதைசொல்லி விருது – கீர்த்திகா கோவிந்தசாமி.

Leave a Comment