பிரதமர் மோடி கடவுள் போன்றவர் – பிரதமர் மோடிக்கு மாலையணிவிக்க முயன்ற சிறுவன்..!

அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி, பிரதமர் மோடிக்கு மாலையணிவிக்க முயன்ற சிறுவன்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக உப்பள்ளிக்கு வருகை புரிந்தார்.  அப்போது அவர் காரின் கதவை திறந்து வைத்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தார்.

சாலையின் இருபுறத்திலும் நின்று பிரதமரை வரவேற்றனர். இருபுறமும் பாதுகாப்பு வளையம் வைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் நின்ற  சிறுவன் ஒருவன் திடீரென்று இரும்பு தடுப்பை தாண்டி பாதுகாப்பு வளையத்தை மீறி ஓடி வந்து பிரதமர் மோடிக்கு மிக அருகில் செல்ல முயன்றார்.

இதனை எடுத்து பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் கூறுகையில் அதாவது சிறுவனும் ஆனது குடும்பத்தினரும் தீவிர ஹிந்துத்துவா பற்று கொண்டவர்கள்.

பிரதமர் மோடி மீது அதீத அன்பும் பாசமும் கொண்ட காரணத்தினால் சிறுவன் எட்டு வயதாக இருக்கும் போதே உப்பள்ளிக்கு பிரதமரை காண வந்துளளர்.

ஆனால் பிரதமரை அவனால் காண இயலவில்லை. பிரதமர் மோடி எப்படியாவது பார்த்து விட வேண்டும் எனவும் அவருக்கு பூமாலை அணிவித்து விட வேண்டும் என்று அவர் மிகுந்த ஆர்வத்தில் இருந்துள்ளார்.  இந்த நிலையில் பிரதமர் மோடியை பார்த்த சிறுவன் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் போலீசாரின் பாதுகாப்பை மீது பிரதமருக்கு மாலை அணிவிக்கும் முயன்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவன் கூறுகையில்,  பிரதமர் மோடியை  நேரில் பார்த்து விட்டேன். அவர் எனக்கு கடவுள் போன்றவர் நான் அவருக்கு மாலை அணிவிக்க முயன்றேன்.ஆனால் போலீசார் என்னை தடுத்து விட்டனர். இருப்பினும் பிரதமரின் கைவிரல் என் மீது பட்டு விட்டது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment