ரோஹித் ஷர்மாவிற்கு சிறப்பு டெஸ்ட் கேப் வழங்கிய பிரதமர் மோடி..!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்களுக்கு டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு தொப்பிகளை பிரதமர்கள் வழங்கினர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் வந்துள்ளனர்.

தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டி இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

போட்டிக்கு முன்னதாக, இரு பிரதமர்களும் கோல்ஃப் வண்டியில் வடிவமைக்கப்பட்ட “தேரில்” அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வலம் வந்தனர். இரு நாட்டு பிரதமர்களும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு மைதானத்தை சுற்றி வந்தனர்.இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும், இரு அணிகளின் கேப்டன்களுக்கும் டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு தொப்பிகளை வழங்கினர்.

Leave a Comment