நாடாளுமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில்,  மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, மக்களவை கூட்டத்தொடருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்கள் காரணமாக மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு அவைகளுக்கும் செயல்பாடுகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 17 முதல் மார்ச் 20 வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.