ஒரு டிரில்லியன் இலக்கு…. ஜன.27-ல் முதல்வர் ஸ்பெயின் பயணம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த வருடம் சென்றதை போல், இந்த வருடமும் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். தமிழகதிற்கு ஒரு டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாகத்தான், சென்ற ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முன்னணி நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் தொழிலாலதிபர்கள் மற்றும் முன்னணி நிறுவன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் முதலீடுகள் செய்ய வலியுறுத்தினார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்.. மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு.!

இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், சுமார் 5 லட்சம் கோடிக்கு அதிகமான முதலீடுகளை தமிழகம் பெற்றது. இந்த நிலையில், அடுத்தகட்ட முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 1 டிரில்லியன் இலக்கை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 27-ஆம் தேதி முதலில் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதல்வர் பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு நாடுகளின் பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் பிப்.12ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த வெளிநாட்டு பயணத்தின்போது, பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிடவும், தொழிலதிபர்களுடனும் கலந்துரையாடி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.